Last Updated:
விராட் கோலி – ருதுராஜ் இணை பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 83 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். மற்றொரு பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இவற்றில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில் அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் தற்போது நடைபெற்று வருகிறது..
டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 22 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் இணைந்த விராட் கோலி – ருதுராஜ் இணை பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 83 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்ட விராட் கோலி சதம் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். கடந்த போட்டியில் அவர் 135 ரன்கள் எடுத்த நிலையில் இன்றைய ஆட்டத்திலும் அவர் சதம் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 53 ஆவது சதம் இதுவாகும்.
December 03, 2025 4:36 PM IST


