Last Updated:
Virat Kohli | சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட துபாய் சென்ற இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க துபாய் சென்றுள்ள இந்திய அணிக்கு பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் அதனை இந்திய வீரர் விராட் கோலி மீறியிருக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்கச் செல்லும் இந்திய வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகளை பிசிசிஐ அண்மையில் விதித்தது. சமையலர்கள் போன்ற தனிப்பட்ட பணியாளர்களை வீரர்கள் அழைத்துச் செல்லக்கூடாது என என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட துபாய் சென்ற இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
பயிற்சிக்குப் பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மட்டும், பிரபல உணவகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவை வைத்திருந்தார். உணவு மற்றும் உடல் கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தும் கோலி, எப்போதும் தனக்கென தனியாக சமையல் கலைஞரை வைத்திருப்பார்.
Also Read | ‘கிரிக்கெட்டின் கடவுள்’ சச்சின் டெண்டுல்கரே சந்திக்க பயந்த ஒரே பௌலர்.. யார் தெரியுமா?
அதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், எந்த மாதிரி உணவு வேண்டும் என்பதை அணியில் உள்ளூர் மேலாளரைத் தொடர்பு கொண்டு பிரபல ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்துள்ளார். ஹோட்டல் சமையல் கலைஞர்கள் விராட் கோலிக்கு என தனி உணவுகளை சமைத்து அவருக்கு டெலிவரி செய்துள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 17, 2025 2:54 PM IST