Last Updated:
Videos From Messi’s Vantara Visit | காயமடைந்து மீட்கப்பட்ட விலங்குகளுக்கு கால்நடை மருத்துவக் குழுவினரால் செய்யப்பட்ட மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை மெஸ்ஸி பார்வையிட்டார்.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டார்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது ‘GOAT டூர்’ பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்தார். அந்த வகையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அனந்த் அம்பானியின் வனவிலங்குகள் மறுவாழ்வு மையமான வந்தாராவிற்கு மெஸ்ஸி வருகை தந்தார். அங்கு அவருக்குப் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரம்பரிய இசை, மலர் மாலைகள், ஆரத்தி மற்றும் பாரம்பரிய உடைகளுடன் மெஸ்ஸிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மெஸ்ஸியுடன் இன்டர் மியாமி அணி வீரர்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் உள்ளிட்டோரும் வருகை தந்தனர். சிங்கம், யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள், காண்டாமிருகங்கள் போன்ற விலங்குகளின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களை மெஸ்ஸி பார்வையிட்டார். விலங்குகளைப் பார்வையிட்ட மெஸ்ஸி அவற்றுக்கு உணவுகளும் அளித்தார்.
மேலும், காயமடைந்து மீட்கப்பட்ட விலங்குகளுக்கு கால்நடை மருத்துவக் குழுவினரால் செய்யப்பட்ட மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை மெஸ்ஸி பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, வனவிலங்கு மருத்துவமனைக்கும் மெஸ்ஸி சென்றார். யானை பராமரிப்பு மையத்தில், தனது தாயுடன் கொட்டில்களில் இருந்து மீட்கப்பட்ட மாணிக்லால் என்ற யானையையும் மெஸ்ஸி சந்தித்தார்.
இந்த வருகையின் போது, அனந்த் அம்பானி மற்றும் ராதிகா அம்பானி ஆகியோரை மெஸ்ஸி சந்தித்தார். வந்தாராவின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பார்வை மற்றும் விலங்கு நலன், மீட்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் அதன் கவனம் குறித்து விருந்தினர்கள் அவருக்கு விளக்கினர். மேலும், லியோனல் மெஸ்ஸியைச் சிறப்பிக்கும் விதமாக இம்மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் எனப் பெயர் சூட்டப்பட்டது.
December 18, 2025 9:49 AM IST


