• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Vantara Foundation Day | பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு… ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு புதிய வாழ்க்கை கொடுத்த வந்தாரா! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Vantara Foundation Day | பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு… ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு புதிய வாழ்க்கை கொடுத்த வந்தாரா! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“ஆனந்த் முகேஷ் அம்பானியால் நிறுவப்பட்ட வந்தாரா நிறுவனமானது கடந்த ஓராண்டில் பெரிய பூனைகள், ஊர்வன, மனிதக் குரங்குகள், பறவைகள், பாலூட்டி வகைகள் என ஆயிரக்கணக்கான வன விலங்குகள், பறவைகளை மீட்டுள்ளன. மீட்கப்பட்ட அவ்விலங்குகளும் பறவைகளும் தற்போது மேம்பட்ட உடல்நலத்துடன், ஆரோக்கியமாக வந்தாராவில் வாழ்ந்து வருகின்றன. இந்த ஓராண்டு காலத்தில், வந்தாராவில் உள்ள கால்நடை மருத்துவக் குழுக்கள் பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, பல விலங்குகளை அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்கு மீண்டும் கொண்டு சென்றுள்ளனர். அதே நேரத்தில் சில விலங்குகளை மீட்பு, சிகிச்சை மற்றும் குணமடைதலுக்குப் பிறகு மீண்டும் காட்டுக்குள் விட்டுள்ளனர். வனவிலங்குப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான தனது மிகப்பெரிய பங்களிப்பிற்காக, ஆனந்த் அம்பானி உலகளாவிய மனிதாபிமான விருதைப் பெற்றுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

விருதுகளுடன் ஆனந்த் அம்பானி

தற்போது EARAZA மற்றும் SEAZA போன்ற வனவிலங்குகளுக்கான அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறது வந்தாரா. மேலும் உலகளாவிய மனிதாபிமான பாதுகாப்புச் சான்றிதழ், மற்றும் பிராணி மித்ரா விருது 2025 ஆகியவற்றின் மூலம் சர்வதேச அளவில் வந்தாராவின் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த அங்கீகாரங்களை தாண்டியும், பல்வேறு நீடித்த தாக்கங்களை ஏற்படுத்துவதில் வந்தாரா தீவிர கவனம் செலுத்தி வருகிறது; உதாரணமாக நூற்றுக்கணக்கான கால்நடை மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு மருத்துவத்தில் பயிற்சி அளித்தல், 50-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச அறிவுப் பகிர்வு நிகழ்வுகளை நடத்துதல், அடுத்த தலைமுறைப் பாதுகாப்புப் பாதுகாவலர்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட outreach திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் போன்ற பணிகளை வந்தாரா செய்து வருகிறது.

இதையும் படிங்க: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : இஸ்ரோ கையிலெடுத்த பிரத்யேக தொழில்நுட்பம்!

வந்தாரா மூலம் மரம் வெட்டுதல், சர்க்கஸ்கள், சவாரிகள் மற்றும் பிச்சை எடுத்தல் போன்றவற்றிலிருந்து மீட்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட யானைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த கால்நடைப் பராமரிப்பு மற்றும் நீண்டகால, சிறப்பு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பல யானைகள் மூட்டுவலி மற்றும் வயது தொடர்பான பிற நோய்களுடன் வாழ்ந்து வந்தன. தற்போது அவை ஆரோக்கியமான இடத்தில் மருத்துவக் கண்காணிப்புடன் வாழ்கின்றன. இத்துடன் நெரிசல் மிகுந்த இடங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான முதலைகளுக்கும் வந்தாரா தொடர்ச்சியான பராமரிப்பை வழங்குகிறது.

வந்தாராவில் பிரதமர் மோடி

தற்போது வனவிலங்குகளுக்கான தேசிய பரிந்துரை மையமாக (மேற்கு மண்டலம்) அங்கீகரிக்கப்பட்டுள்ள வந்தாரா, வனவிலங்குகளின் ஆரோக்கியத்தை பரந்த நோய் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு அமைப்புகளுடன் இணைப்பதன் மூலம் இந்தியாவின் ‘ஒரே ஆரோக்கியம்’ சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தியுள்ளது. இதன் அறிவியல் துணையாக, ஒரு முதன்மை அறிவியல் ஆய்வகம் மற்றும் 11 துணை ஆய்வகங்கள் உள்ளன. இவை 70-க்கும் மேற்பட்ட நிபுணர்களின் உதவியுடன், நாளொன்றுக்கு 2,000-க்கும் மேற்பட்ட நோய் கண்டறியும் மாதிரிகளைப் பரிசோதிக்கின்றன. இந்த ஆய்வகங்கள் பயோ-பேங்கிங், அடுத்த தலைமுறை மரபணு வரிசைமுறை (next-generation sequencing), மூலக்கூறு நோய் கண்டறிதல், நோயியல், ஒட்டுண்ணியியல் மற்றும் நச்சுயியல் போன்ற நவீனத் திறன்களைக் கொண்டுள்ளன.

இதையும் படிங்க: பாக். ராணுவ அமைச்சரால் வந்த சர்ச்சை… கொந்தளித்த இஸ்ரேல்… ஈரான் உடனான சமாதானப் பேச்சுவார்த்தையில் சறுக்கல்?

தினமும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்குத் தேவையான 1,56,000 கிலோ உயர்தர ஊட்டச்சத்து உணவை, முழு தானியங்கி அமைப்புகள் மூலம் வந்தாரா உற்பத்தி செய்கிறது. இந்த உணவுகள் 50 வெப்பநிலைக் கட்டுப்படுத்தப்பட்ட வாகனங்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. 200 தகுதிவாய்ந்த நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் இத்திட்டத்திற்கு, தீவனம் மற்றும் விலங்குத் தீவனங்களை பயிரிடும் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆதரவு அளிக்கின்றனர். இந்த ஒருங்கிணைந்த பராமரிப்பிற்கு இணையாக, 200 உறுப்பினர்களைக் கொண்ட 24 மணிநேர மீட்புக் குழுவும் செயல்படுகிறது. இக்குழு இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மீட்பு நடவடிக்கைகளிலும், 15 வனவிலங்கு விரைவுப் பதில் மற்றும் மீட்புக் குழு (Wildlife Rapid Response and Rescue Team) பணிகளிலும் பங்காற்றியுள்ளது.

வந்தாராவில் பிரதமர் மோடி

இத்துடன் வந்தாரா நிறுவனமானது, தனது கட்டமைக்கப்பட்ட இனப்பெருக்கம் மற்றும் மறுவனமாக்கல் திட்டங்கள் மூலம் அழிந்துவரும் உயிரினங்களையும் பாதுகாத்து வருகிறது. குஜராத் மற்றும் இந்தோனேசியாவில் வனவிலங்குகளை மீண்டும் காட்டில் விடும் முக்கிய முயற்சிகள், அறிவியல் சார்ந்த சுற்றுச்சூழல் மீட்பு மற்றும் வனவிலங்குகளை அவற்றின் இயற்கையான இல்லங்களுக்குத் திருப்புவதில் வந்தாராவின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. பஞ்சாப் வெள்ளத்தின் போது, பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான விலங்குகளைப் பாதுகாத்தது வந்தாரா. மேலும் அச்சமயத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு ஆதரவு அளித்ததன் மூலம், சுற்றுச்சூழலின் மீள்திறனும் மனித நல்வாழ்வும் ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை வந்தாரா உறுதிப்படுத்தியது. ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பிறகு மீட்பு, ஆராய்ச்சி மற்றும் சமூக ஈடுபாட்டை ஒருங்கிணைத்து, ஒரு நிலையான எதிர்காலத்திற்காகப் பங்காற்றும் அறிவியல் ரீதியான பாதுகாப்பு அமைப்பாக வந்தாரா வளர்ந்துள்ளது.”

Read More

Previous Post

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி கோரிக்கை! மக்கள் கடும் எதிர்ப்பு

Next Post

சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரீசார்ஜ் விலை உயர்வு கவலை இனி இல்லை

Next Post
சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரீசார்ஜ் விலை உயர்வு கவலை இனி இல்லை

சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரீசார்ஜ் விலை உயர்வு கவலை இனி இல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin