இந்தியாவின் மிக முக்கிய வணிக மற்றும் ஆன்மீக நகரங்களை இணைக்கும் இந்த ரயில், தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முழுமையான குளிரூட்டப்பட்ட பெட்டிகள், விமான பாணி இருக்கைகள், தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்பு மற்றும் உணவு வசதிகள் என பல்வேறு அதிநவீன அம்சங்களை இது கொண்டுள்ளது.

