Last Updated:
Valentines Day Special Sale | காதலர் தின சிறப்பு விற்பனையின்போது ஹையர் இந்தியா நிறுவனம் அதன் தயாரிப்புகளுக்கு எக்ஸ்டன்டட் வாரன்டியை வழங்குகிறது.
உலகம் முழுவதும் நாளை (பிப்.14ஆம் தேதி) காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஹையர் இந்தியா (Haier India) நிறுவனம் காதலர் தினத்தை முன்னிட்டு அதன் வீட்டு உபயோகப் பொருட்களுக்கென்று பிரத்யேக தள்ளுபடிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு தள்ளுபடியின்போது வாடிக்கையாளர்கள் ஹையர் நிறுவனத்தின் ரெஃப்ரிஜிரேட்டர்ஸ், ஏர் கண்டிஷ்னர்ஸ், எல்இடி டிவி-க்கள், வாஷிங் மெஷின்கள், ரோபோ வாக்யூம் கிளீனர்கள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்களை வாங்கினால் கணிசமான அளவு பணம் சேமிக்க முடியும்.
Haier-ன் காதலர் தின தள்ளுபடி குறித்த விவரங்கள்:
ஹையர் இந்தியா நிறுவனம் “ரூ.1 செலுத்தி, ஹையர் தயாரிப்புகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்” என்ற ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் Haier சாதனங்களை எளிதில் வாங்கக்கூடிய வாய்ப்பை நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கூடுதலாக வாடிக்கையாளர்கள் அனைத்து ஹையர் நிறுவன தயாரிப்புகளிலும் 25% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டை பெற முடியும்.
இந்த காதலர் தின சிறப்பு விற்பனையின்போது ஹையர் இந்தியா நிறுவனம் அதன் தயாரிப்புகளுக்கு எக்ஸ்டன்டட் வாரன்டியை வழங்குகிறது. ஹையர் வாடிக்கையாளர்கள் எளிய மற்றும் விரைவான EMI-ஐ வெறும் ரூ.994 முதல் தேர்வு செய்யலாம். இது இந்த காதலர் தினத்தில் Haier உபகரணங்களை அன்புக்குரியவர்களுக்கு கிஃப்டாக அளிப்பதற்கான ஒரு நல்ல விருப்பமாக அமைகிறது.
ஹையரின் காதலர் தின சிறப்பு சலுகைகள் சுருக்கமாக கீழே…
- உங்கள் ஆர்டர்களுக்கு 25% உடனடி தள்ளுபடி.
- ரூ 994 முதல் தொடங்கும் ஈஸி EMI
- தேர்ந்தெடுக்கப்பட்ட டிவைஸ்களுக்கு எக்ஸ்டன்டட் வாரன்டி
- “ரூ.1 செலுத்தி, ஹையர் தயாரிப்புகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்” என்ற சலுகை நிறுவனத்தின் பிரீமியம் தயாரிப்புகளை அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது.
மேற்கண்ட காதலர் தின சிறப்பு சலுகைகளை பெற Haier India நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை வாடிக்கையாளர்கள் விசிட் செய்யலாம். இதன் மூலம் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு பிரீமியம் ஹையர் உபகரணங்களை பரிசளிக்க இந்த குறிப்பிட்ட கால சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்க: ரெப்போ ரேட்டை RBI குறைத்துள்ள நிலையில், மூத்த குடிமக்களுக்கான சமீபத்திய FD விகிதங்கள்..!
இதனிடையே காதலர் தினத்தையொட்டி பிரபல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான போகோ, சிறப்பு சலுகைகளை அறிவித்து உள்ளது. பிரபல இ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் மூலம் காதலர் தினத்திற்கு முன் சமீபத்திய ஸ்மார்ட்ஃபோன் மாடல்களில் Poco தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதியோடு முடிவடைய உள்ள இந்த சிறப்பு விற்பனையில், சீன நிறுவனமான போகோ தனது Poco X7 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் Poco M6 Plus 5G மற்றும் Poco M7 Pro 5G ஸ்மார்ட் ஃபோன்களின் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளது. இருப்பினும், தள்ளுபடி விலைகளைப் பெற வாடிக்கையாளர்கள் தகுதியான பேங்க் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
February 13, 2025 7:44 PM IST
Valentines Day Special Sale | Haier-ன் காதலர் தின சிறப்பு விற்பனை: ஏசி, டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பல பொருட்களை மலிவாக வாங்க வாய்ப்பு…!