Last Updated:
Valentine Rose: காதலர் தின கொண்டாட்டத்தால் ரோஜா பூக்களின் விற்பனை அதிகரித்து உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தப் பெரும்பாலும் பரிசுப் பொருட்களை அளிப்பதுடன், பூக்களை (ரோஜா பூ) கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
பூக்கள் என்றாலே பெண்களுக்குப் பிடிக்கும். அதுவும் ரோஜா பூக்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதற்கு ஏற்றார் போல காதலர் தினத்தில் காதலர்கள் முதலில் தன் காதலிக்குக் கொடுப்பது ரோஜா மலர்களேயாகும்.
அந்த வகையில் விழுப்புரம் பூ மார்க்கெட்டில் மொத்தமாகவும், சில்லறையாகவும் ஏராளமான ரோஜா பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஓசூர், பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளிலிருந்து தாஜ்மஹால் ரோஜா, பட்டர் ரோஜா, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, டபுள் ஷேடு ரோஜாக்கள் என பல வண்ணங்கள் ரோஜாப் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
இதையும் படிங்க: Valentine’s Day Bouquet: 5 ரோஸில் அசத்தலா ஒரு பொக்கே… காதலரைக் கவர கலர்கலர் மலர்கள்…
காதலர் தினத்தைக் கொண்டாட்டம் காரணமாக 20, 30 ரூபாய்க்கு விற்பனையான ஒரு ரோஜா பூ தற்போது 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் ஒரு ரோஜா கிப்டாக பேக் செய்து விற்பனை செய்தால் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு ரோஜா பூ 800 முதல் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய காதலர் தினத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரோஜா மலர்கள் அதிகளவில் விற்பனையாகிறது என வியாபாரி உமா தெரிவித்தார். மற்ற நாட்களை விட இன்றைய நாளில் ரோஜா மலர்களின் விற்பனை அதிகரித்து உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் வியாபாரிகள்.
மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு அன்பை வெளிப்படுத்துவதற்காக மலர்களால் ஆனா பொக்கே விற்பனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொக்கே 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Valentine’s Day Story: எங்கள பாத்து கல்யாணத் தம்பதியும் ஹேப்பி ஆகிடுவாங்க… கலகல கப்பிள் ஃபோட்டோகிராபர்ஸ்…
மேலும், விழுப்புரம் சந்தைகளில் ரோஜாப் பூக்களை வாங்குவதற்குக் காதலர்களைக் காட்டிலும் கணவன்மார்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் எனவும் வியாபாரமும் நல்ல முறையில் நடப்பதாக வியாபாரி உமா தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Viluppuram,Tamil Nadu
February 14, 2025 1:28 PM IST

