இந்த விவாதத்தின்பொது ட்ரம்ப், “இது போன்ற மனநிலையில் இருநாடுகளுக்கு மத்தியில் வணிகம் செய்வது மிகவும் கடினம்” என ஒப்பந்தம் செய்துகொள்ளும் முடிவை மாற்றியது குறித்து தெரிவித்தார். அமெரிக்காவின் உதவிக்கு எப்போதும் நன்றி கூறுங்கள் என்றார் வான்ஸ். அதனால் கனிம வள ஒப்பந்தம் நிறைவேறாமல் நிறுத்தப்பட்டது. “அமைதி பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கிக்கு உடன்பாடு இல்லை’ எனப் பல்வேறு வழிகளில் ட்ரம்ப் நிறுவிக் கொண்டே இருந்தார். முதல் 30 நிமிடங்களுக்கு பின்னர் பேச்சுவார்த்தை இப்படி தான் கொஞ்சம் கொஞ்சமாக வாக்குவாதமாக மாறியது.
இறுதியில் வெள்ளைமளிகையை விட்டு ஜெலன்ஸ்கி வெளியேறியாதற்குப் பிறகும், “அமைதியை ஏற்படுத்தும் மனநிலை ஏற்பட்டால் மட்டும் மீண்டும் வாருங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
மறுபக்கம் ஜெலன்ஸ்கி, இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

