Last Updated:
குறிப்பாக சமூக வலைதளங்களில் மதுரோ கை விலங்குடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை ஐக்கிய நாடுகள் அவை கண்டிக்க வேண்டும் என்று ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில், அமெரிக்கச் சிறப்புப் படைகள் வெனிசுலாவின் கராகஸ் நகரில் அதிரடித் தாக்குதல் நடத்தி அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ளன. வானிலை காரணமாக 4 நாட்கள் தாமதமாக நடந்த இந்த நடவடிக்கை, இப்போது சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக சமூக வலைதளங்களில் மதுரோ கை விலங்குடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. வெனிசுலா தலைநகரில் ஒருபுறம் மதுரோ ஆதரவாளர்கள் போராடினாலும், மற்றொரு புறம் வெனிசுலாவுக்கு விடுதலை கிடைத்திருப்பதாக ஒரு தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் மற்றும் தரைப்படை ஊடுருவலை ஈரான் ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும், இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான தாக்குதல் என்று ஈரான் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிட வேண்டும் என்றும், அமெரிக்காவின் இந்த அத்துமீறலை சர்வதேச அளவில் உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.


