• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

US tariff: `ட்ரம்ப் விதித்த 25% வரி; இந்திய பங்குச்சந்தையில் ஏற்படும் தாக்கம்' – விளக்கும் நிபுணர்

GenevaTimes by GenevaTimes
July 31, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
US tariff: `ட்ரம்ப் விதித்த 25% வரி; இந்திய பங்குச்சந்தையில் ஏற்படும் தாக்கம்' – விளக்கும் நிபுணர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘நினைவில் கொள்ளுங்கள்… இந்தியா நமது நண்பனாக இருக்கும்போது…’ என்று தனது சமூக வலைதள போஸ்டை ஆரம்பித்து, இந்தியா மீது 25 சதவிகித வரியைப் போட்டு தீட்டியிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இது இந்தியாவில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

“கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, இந்தியா மீது 26 சதவிகித வரியை விதித்திருந்தார் ட்ரம்ப். இந்த வரியை இப்போது 25 சதவிகித வரியாக ஆக்கியிருக்கிறார். இந்த 1 சதவிகித வரி குறைப்பைப் பாசிட்டிவாக நான் பார்க்கிறேன்.

எக்ஸ்ட்ரா பெனால்டி என்பது நமக்கு மட்டுமல்ல… ரஷ்யா உடன் வணிகம் செய்யும் அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும். ஆனால், அது எவ்வளவு என்பது நமக்கு இப்போதைக்கு தெரியவில்லை.

US tariff: இந்தியா மீது ட்ரம்ப் விதித்த 25% வரி; என்னென்ன துறைகள் பாதிக்கும்; எதற்கு பாதிப்பு இல்லை?

ஏன் இந்தியா மீது அதிக வரி?

இந்தியா – அமெரிக்கா வர்த்தகத்தில், அமெரிக்காவிற்கு வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இதற்காகத் தான், இந்தியா மீது ட்ரம்ப் அதிக வரியை விதித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போரை பொறுத்தவரை, ட்ரம்ப் அதை நிறுத்த எவ்வளவோ முயன்றார். ஆனால், புதின் எதற்கும் சரிப்பட்டு வரவில்லை.

அதனால், அவர் ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளின் மீது அபராத வரி விதித்து, ரஷ்யாவைப் பணிய செய்யலாம் என்று நினைக்கிறார். இதற்காக, புதின் இறங்கி வந்துவிடுவார் என்று தெரியவில்லை.

பங்குச்சந்தை என்ன ஆகும்?

பங்குச்சந்தை
பங்குச்சந்தை

ஐரோப்பிய யூனியன், ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு 15 – 20 சதவிகித வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்த நாடுகளுடன் வரி விஷயத்தில் நம் நாடு போட்டி போட முடியாது.

இதனால், ஆரம்பத்தில், பங்குச்சந்தையில் சின்ன ஜர்க் இருக்கும்.

ட்ரம்ப் செய்த 2 விஷயங்கள்…

நேற்று ட்ரம்ப் இதை மட்டும் செய்யவில்லை. இன்னும் இரண்டு விஷயங்களை செய்துள்ளார்.

அமெரிக்காவின் பங்குச்சந்தை முடிவுக்கு வரும் நேரத்தில், அவர் காப்பருக்கு 50 சதவிகித வரியை அறிவித்தார். இதனால், சந்தையின் முடிவிலேயே காப்பரின் மதிப்பு கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்துவிட்டது.

அடுத்ததாக, முன்னாள், 800 டாலருக்கு கீழ் இருக்கும் பாக்கெட் மற்றும் பொருள்களின் இறக்குமதிகளுக்கு முதலில் அமெரிக்காவில் வரி இல்லை. இதற்கு ‘De Minimus’ என்று பெயர்.

ஆனால், இந்தப் பொருள்களுக்கும் ட்ரம்ப் அந்தந்த நாடுகளின் வரிகளைத் தற்போது அறிவித்துள்ளார்.

இதுவும் ஒருவிதத்தில் அதிர்ச்சி முடிவு தான்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

தங்கம் விலை என்ன ஆகும்?

ட்ரம்ப் வரிகளை விதித்து வருகிறார். இன்னொரு பக்கம், பெடரல் வங்கி தற்போதைக்கு வட்டி விகிதத்தைக் குறைக்கமாட்டேன் என்று கூறிவிட்டது.

அதனால், நேற்றே பெரியளவில் தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு குறைந்தது.

“இந்தியா, சீனாவுக்கு வேண்டாம்; அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுங்கள்..” – ட்ரம்ப் கறார்

பங்குச்சந்தை எப்படி இருக்கும்?

ட்ரம்ப் இன்னும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குக் கடிதம் எழுத உள்ளார்.

இந்த 25 சதவிகித வரி இனி குறைக்கப்படலாம். இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படலாம். ஆனால், எதுவும் நாளைக்குள் நிச்சயம்ம் நடந்துவிடாது.

இதனால், பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை இருக்கும்.

அதனால், இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி நல்ல பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்கலாம். ஆனால், வேறெந்த முடிவையும் இப்போதைக்கு அவசரப்பட்டு எடுக்க வேண்டாம்.

இந்தியாவில் என்னென்ன துறைகள் பாதிக்கும்?

தங்கம்
தங்கம்

இந்தியா உடன் ஜவுளித்துறையில் தாய்லாந்து, கம்போடியா, இன்ஜினீயரிங் துறையில் தென் கொரியா, எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஜப்பான் ஆகிய நாடுகளும் அமெரிக்காவில் இறக்குமதிகளைச் செய்கின்றன.

அப்படி பார்க்கையில், இந்த நாடுகளுக்கு தற்போது இந்தியாவை விட, குறைந்த வரிகளே விதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால், இந்தத் துறைகள் பாதிக்கும்.

ஆனால், கற்கள் மற்றும் நகைகள் துறையில் இந்தியாவே அதிக கோலொச்சுகிறது. இதில் ஓரளவு நிம்மதி அடையலாம்.

`AI தொழில்நுட்பங்கள் எந்தெந்த தொழில்களை மாற்றியமைக்கும்?’ – மைக்ரோசாப்ட் ஆய்வு சொல்வதென்ன?

மருத்துவத் துறை

மருத்துவத் துறையில் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இதில் என்ன மாற்றம் செய்தாலும், இந்தியாவிற்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. காரணம், இந்தியா வேறு நாடுடன் வணிகத்தை மாற்றிக்கொள்ளும்.

அமெரிக்காவிற்கு மருந்து மிக அதிக தேவை. அமெரிக்காவிற்கு எவ்வளவு மருத்துவத் தேவை உள்ளதோ, அதே அளவிற்கான மருத்துவத் தேவை ஐரோப்பாவிற்கும் உண்டு.

சீனா உடன் என்ன?

இப்போதைக்கு நம்மை விட அதிக வரி விகிதம் சீனாவிற்கு தான் உண்டு. அது 30 சதவிகிதம்.

அமெரிக்கா, சீனா இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருவதால், இந்த வரி விகிதம் குறைக்கப்படலாம்.

அமெரிக்க சந்தை | us dollar – usd – அமெரிக்க டாலர்

அமெரிக்க சந்தை

அனைத்து நாடுகளுக்கு வரி விகிதம் 15 – 25 சதவிகிதம் இருக்கும் என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். இதன்படி பார்த்தால், நமது நாட்டிற்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அமெரிக்க மக்கள் நம் நாட்டின் பொருள்களைக் காட்டிலும், குறைந்த வரி உள்ள நாடுகளின் பொருள்களை வாங்கத் தொடங்குவார்கள்.

என்ன தான், இனி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், இப்போது சந்தையை விட்டுவிட்டால், பின்னர், இதே சந்தையைப் பிடிப்பது கடினம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், இது எதனாலும், இந்திய பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டு விடாது”.

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ‘Vikatan Play‘-ல் ‘Opening Bell Show’ தினமும் காலை கேளுங்கள்.

Vikatan Play-ல் Opening Bell Show
Vikatan Play-ல் Opening Bell Show

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4த

Read More

Previous Post

ஆன்லைன் பேமெண்ட்களுக்கு பயோ மெட்ரிக் சரிபார்ப்பு.. முதன்முறையாக அறிமுகம் செய்த வங்கி!

Next Post

12,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டு பெற்றதாகக் கூறப்படும் ஆறு போலீஸ்கார்களுக்கு தடுப்புக் காவல் | Makkal Osai

Next Post
12,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டு பெற்றதாகக் கூறப்படும் ஆறு போலீஸ்கார்களுக்கு தடுப்புக் காவல் | Makkal Osai

12,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டு பெற்றதாகக் கூறப்படும் ஆறு போலீஸ்கார்களுக்கு தடுப்புக் காவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin