• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

US Plane Crash: மோதி வெடித்த விமானம் – ஹெலிகாப்டர்; கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்.. என்ன நடந்தது?

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
US Plane Crash: மோதி வெடித்த விமானம் – ஹெலிகாப்டர்; கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்.. என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் அமெரிக்கன் ஏர்லைன்ஸின் பாம்பார்டியர் CRJ700 என்ற விமானம், ஹெலிகாப்டருடன் மோதி வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

பயணிகள் விமானம்:

அமெரிக்காவின் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், பாம்பார்டியர் CRJ700 விமானம், கன்சாஸின் விச்சிட்டாவிலிருந்து புறப்பட்டது. விமானத்தில் 60 பயணிகள், 4 பணியாளர்கள் என மொத்தம் 64 பேர் பயணித்தனர். அந்தப் பயணிகளில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிகர் ஸ்கேட்டிங் (பனிச் சறுக்குகளில் நடனமாடும் விளையாட்டு) வீரர்கள் சிலர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தின் பயிற்சி ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்ததாக வாஷிங்டன் DC மேயர் முரியல் பவுசர் தெரிவித்திருக்கிறார். விமானமும், ஹெலிகாப்டரும் உள்ளூர் நேரப்படி, 11 மணியளவில் வாஷிங்டன் டிசி விமான நிலையத்தை நெருங்கும்போது மோதி, வெடித்துச் சிதறி போடோமாக் ஆற்றில் விழுந்திருக்கின்றன.

விமான விபத்து – வாஷிங்டன் டிசி

என்ன நடந்தது?

விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்த அதே நேரத்தில் வர்ஜீனியாவின் ஃபோர்ட் பெல்வோயரில் இருந்து புறப்பட்ட சிகோர்ஸ்கி H-60 ​​என்ற ராணுவ ஹெலிகாப்டர் வாஷிங்டன் டிசி விமான நிலையத்தை நோக்கி வந்திருக்கிறது. அப்போது இரண்டும் மோதிக்கொண்டதால் இந்த விபத்து நடந்திருக்கிறது. விமானம் பல துண்டுகளாகச் சிதறி ஆற்றில் மூழ்கியிருக்கிறது. அதே நேரத்தில் ஹெலிகாப்டர் தண்ணீரில் தலைகீழாக விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கியவர்களில் 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

உறைபனி காலம் என்பதால், தொடர்ந்து மீட்புப் பணிகளில் சற்று தொய்வு தெரிகிறது. மற்ற பயணிகளின் உடல்களைத் தேடும் பணியில் 300 மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட நடவடிக்கையாக ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்துடன் (NTSB) இணைந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதாக FAA தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள்:

தற்போதுவரை 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க ஃபிகர் ஸ்கேட்டிங் துறையைச் சேர்ந்தப் பலர் இந்த விமான விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிகிறது. அமெரிக்க ஃபிகர் ஸ்கேட்டிங் மேம்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள், “கன்சாஸில் உள்ள மேம்பாட்டு முகாமிலிருந்து வீடு திரும்பும் வீரர்கள், பயிற்சியாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என எங்கள் ஸ்கேட்டிங் குழுவைச் சேர்ந்த பலர் துரதிஷ்டவசமாக விமானத்திலிருந்தனர். ரஷ்யாவைச் சேர்ந்த ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள், முன்னாள் உலக சாம்பியன்களான யெவ்ஜீனியா ஷிஷ்கோவா, வாடிம் நௌமோவ் ஆகியோரும் விமானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது” என்றனர்.

மீட்புப் பணிகள் குறித்துப் பேசிய வாஷிங்டன் DC தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மைய தலைமை அதிகாரி ஜான் டோனெல்லி, “படகுகளில் சுமார் 300 மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் எங்களுக்குக் காற்று, பனித்துண்டாக மாறும் தண்ணீர், ஆழத்தில் இருக்கும் விமானத்தின் சிதைந்த பாகங்கள் எனச் சவால்கள் அதிகமாக இருக்கிறது” என்றார். அதிகாரப்பூர்வ உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

WASHINGTON DC MAY BE UNDER ATTACK RIGHT NOW….. pic.twitter.com/Vwm3R52kzQ

— BIG HIT (@Xpert_things) January 30, 2025

அமெரிக்க அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

அதிபர் ட்ரம்ப் இந்த விபத்து குறித்துப் பேசும்போது, “இது ஒரு மோசமான சூழ்நிலை, இது தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பயங்கரமான விபத்து குறித்து எனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மாவைக் கடவுள் ஆசீர்வதிப்பாராக. மீட்புப் படையினருக்கு நன்றி.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், “இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்… அவர்களின் குடும்பத்துக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

1968-ல் ராணுவ விமான விபத்து, 56 ஆண்டுகளாக பனியில் புதைந்துகிடந்த கேரள ராணுவ வீரரின் உடல் மீட்பு!



Read More

Previous Post

வருமான வரியில் மாற்றம் வருமா…?

Next Post

வெளிநாட்டு வாழ்க்கைத் துணைகளுக்கான நுழைவு அனுமதி செயல்முறையை அரசாங்கம்  மேம்படுத்தியுள்ளது – Malaysiakini

Next Post
வெளிநாட்டு வாழ்க்கைத் துணைகளுக்கான நுழைவு அனுமதி செயல்முறையை அரசாங்கம்  மேம்படுத்தியுள்ளது – Malaysiakini

வெளிநாட்டு வாழ்க்கைத் துணைகளுக்கான நுழைவு அனுமதி செயல்முறையை அரசாங்கம்  மேம்படுத்தியுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin