Last Updated:
இரு நாடுகளுக்கும் இடையே முன்பு இருந்த பதற்ற நிலை தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
ஈரானில் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேரிலாந்து நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மையில் ஈரான் மீது மூன்று நாட்கள் தாக்குதல் நடத்திய போதும், அந்நாட்டுடன் சுமூக உறவு நீடிப்பதாகக் கூறினார். தோஹா நகரில் நடைபெற்ற போர் நிறுத்தம் குறித்தப் பேச்சுவார்த்தை முன்னேற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே முன்பு இருந்த பதற்ற நிலை தற்போது இல்லை என்றும், அணு ஆயுதமற்ற ஈரானை உருவாக்குவதே தங்களது இலக்கு என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதனிடையே, தோஹாவில் அமெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுக்களுடன் நடத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது. இதனை உறுதி செய்துள்ள ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது பற்றி அமெரிக்காவிடம் முறையிடுவதற்காக ஒரு தகவல் தொடர்பு வழித்தடத்தை உருவாக்க உள்ளதாகக் கூறினார். முடக்கப்பட்டுள்ள 57 ஆயிரம் கோடி சொத்துகளில் ஒரு பகுதி, தங்கள் நாட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் கரிபாபாடி தெரிவித்துள்ளார்.

