ஈரான் உடனான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போரை கைவிடும்படி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர், டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதை ஏற்ற டிரம்ப், தான் விதித்த காலக்கெடு முடிவடைய 2 மணி நேரங்களுக்கு முன்பு, ஒரு மாற்று முடிவை எடுத்தார். அதன்படி அடுத்த 2 வாரங்களுக்கு போர் நிறுத்தத்துக்கு டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல் போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான் அளித்துள்ள 10 அம்ச கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் இதை ஒரு “இருதரப்பு போர் நிறுத்தம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


