அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபத் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் அதிபரும் தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வாகை சூடி இருக்கிறார்
அதேபோல இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று, டெலாவேர் மாகாண செனட்டரான 34 வயதான சாரா மெக்பிரைட், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் இடம் பிடித்திருக்கிறார். இதன் மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் திருநங்கை உறுப்பினர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார்.
மெக்பிரைட்டுக்கு இதுவொன்றும் முதல் தேர்தல் வெற்றி அல்ல… டெலாவேர் மாகாண செனட்டின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான பிறகு, 2020-ல் மாநில செனட் இருக்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை சாரா மெக்பிரைட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல பராக் ஒபாமாவின் ஆட்சியில் 2012-ல் வெள்ளை மாளிகையில் பயிற்சி பெற்ற முதல் திருநங்கை… 2016-ல் ஜனநாயக தேசிய மாநாட்டில் உரையாற்றி அரசியல் கருத்துகளை முன்வைத்த முதல் திருநங்கை என அமெரிக்க அரசியல் வரலாற்றில் சாரா மெக்பிரைட்டின் பெயர், பல பக்கங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

