இந்த விமானங்கள் சைபர் தாக்குதல்கள், அணு ஆயுத தாக்குதல்கள், மின்காந்த விளைவுகளை எதிர்கொண்டாலும் ஆபத்துகளிலிருந்து தப்பி உறுதியாக இருக்கும் என்கின்றனர். நேரடி தாக்குதல்கள் நடத்தப்படும் பட்சத்தில் பதில் தாக்குதல் நடத்தும் திறனும் இவற்றிடம் உள்ளது.
இந்த விமானம் வெப்பம் மற்றும் அணுக்கருவில் இருந்து பாதுகாக்கும் கவசத்தைக் கொண்டிருக்கிறது. இதன் மூக்கு பகுதியிலிருக்கும் ரே டோமில் உள்ள 67 செயற்கைகோள் டிஷ்கள் மற்றும் ஆன்டனாக்கள் மூலம் உலகின் எந்த பகுதியையும் தொடர்புகொள்ள முடியும்.
ஒருவாரம் வரை இந்த விமானம் தரையிறங்காமல் வானிலேயே இயங்க முடியும். பறந்துகொண்டிருக்கும்போதே இதன் எரிபொருளையும் நிரப்பிக்கொள்ள முடியும் என்கின்றனர். அமெரிக்காவில் இப்போது 4 டூம்ஸ் டே விமானங்கள் உள்ளன. தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடும் இந்த விமானங்களில் ஒன்று போர் சூழலில் வாஷிங்டன் வந்திருப்பதுதான் பேசுபொருளாகியிருக்கிறது.

