கோலாலம்பூர்:
இன்று (ஜனவரி 17, 2026) உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையின் நிறைவுரையில் பேசிய ஜாஹிட் ஹமிடி, மாணவர்களின் கல்வித் தரத்தை முறையாக அளவிட பொதுத் தேர்வுகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பொறுப்பை, உயர்க்கல்வி அமைச்சரும் பேராக் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ ஜாம்ரி அப்துல் காதிரிடம் ஜாஹிட் ஒப்படைத்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் பேசுகையில், இந்த இரு தேர்வுகளையும் மீண்டும் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்று அறிவித்திருந்தார்.
இதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தேசிய கல்வி ஆலோசனைக் குழு (MPPK) மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் இந்த ஆண்டிற்குள் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான UPSR தேர்வு 2021-இல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் படிவம் மூன்று மாணவர்களுக்கான PT3 இந்த மதிப்பீட்டுத் தேர்வு 2022-இல் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. குறிப்பிடத்தக்கது.




