Last Updated:
UPI எப்பொழுதும் பாதுகாப்பானது என நம்பும் சாதாரண குடும்பங்களை மோசடிக்காரர்கள் குறிவைக்கின்றனர். உண்மையில் UPI என்பது ஒரு பாதுகாப்பான அமைப்புதான். ஆனால், அதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து அது அமைகிறது.
இன்று UPI பேமென்ட்கள் என்பது அனைவராலும் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பேமென்ட் செலுத்தும் முறையாக அமைகிறது. QR கோடுகளை ஸ்கேன் செய்து ஒரே ஒரு கிளிக் மூலமாக நம்மால் பணத்தை மற்றவருக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும். ஆனால், இந்த சௌகரியம் காரணமாக புதுப்புது டிஜிட்டல் மோசடிகளும் தற்போது வலம் வருகின்றன.
UPI எப்பொழுதும் பாதுகாப்பானது என நம்பும் சாதாரண குடும்பங்களை மோசடிக்காரர்கள் குறிவைக்கின்றனர். உண்மையில் UPI என்பது ஒரு பாதுகாப்பான அமைப்புதான். ஆனால், அதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து அது அமைகிறது.
ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்கள், போலியான கஸ்டமர் கேர் நம்பர்கள், போலி ரீஃபண்ட் லிங்குகள், தவறான QR கோடுகள் மூலமாக மோசடிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான மக்கள் ஒரு அப்ளிகேஷனில் என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் படிக்காமலேயே உடனடியாக அதற்கான அனுமதிகளைக் கொடுத்து, அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். பணத்தை அனுப்பிய பிறகு உங்களால் அதனை உடனடியாக ரிவர்ஸ் செய்ய முடியாது.
டிஜிட்டல் பேமென்ட்களைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். மோசடிகள் குறித்து விழிப்புணர்வு இல்லாமலேயே வயதானவர்கள் அல்லது டீனேஜர்கள் மோசடிகளுக்கு இரையாகின்றனர். பிறரிடம் OTP-ஐ பகிர்ந்து கொள்ளக்கூடாது, தெரியாத அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்யக்கூடாது போன்ற எளிமையான விதிகளைப் பின்பற்றுவது அவசியம். அதுமட்டுமல்லாமல் பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்கள் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.
மற்றொரு புத்திசாலித்தனமான யோசனை என்னவென்றால், இது மாதிரியான UPI பேமென்ட்கள் செய்வதற்கு தனியாக ஒரு அக்கவுன்ட் வைத்திருப்பது நல்லது. சேமிப்புக் கணக்குகளை தனியாக வைத்துக்கொண்டு, செலவுக் கணக்கை தனியாகப் பராமரிக்கலாம். UPI-இல் இணைக்கப்பட்டுள்ள அந்தக் கணக்கில் ஒரு சிறிய அளவிலான பேலன்ஸ் மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான வங்கிகள் அப்ளிகேஷனுக்குள் டிரான்சாக்ஷன் லிமிட்டுகளை அமைப்பதற்கு அனுமதிக்கின்றன. உங்களுடைய போனில் வலுவான அன்லாக் முறையைப் பயன்படுத்துங்கள், அப்ளிகேஷன் அளவிலான PIN பாதுகாப்பு முறையை எனேபிள் செய்யுங்கள். உண்மையான கஸ்டமர் கேர் நம்பர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தெரியாத நபர்களிடமிருந்து வரும் லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.
UPI என்பது ‘Pay’ என்ற பட்டனை நீங்கள் அழுத்திய உடனேயே செயல்படக்கூடிய ஒன்று. எனவே, அதனை அழுத்துவதற்கு முன்பு பெறுநரின் பெயரை கவனமாகப் பார்க்கவும். QR கோடை எச்சரிக்கையோடு ஸ்கேன் செய்யுங்கள். மேலும், ஸ்கிரீனில் வரும் பிராம்டுகளைப் படிப்பதன் மூலம் தவறுதலாக பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்வதை நீங்கள் தவிர்க்கலாம்.
December 10, 2025 4:23 PM IST


