இந்த அம்சத்தின் பயன் என்ன?: UPI RuPay கிரெடிட் கார்டு பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. தொடர்ந்து உங்களுடைய டிரான்ஸாக்ஷன்களுக்கு ரிவார்டு பாயிண்டுகளைப் பெறுவீர்கள். அதே சமயத்தில், உங்களுடைய கிரெடிட் கார்டு பில்லை சரியான நேரத்தில் செலுத்தும் பட்சத்தில், வழக்கமான வட்டி இல்லா கால அவகாசத்தைப் பெறுவீர்கள். ஒரு நாளைக்கு இதில் 1 லட்ச ரூபாய் வரை டிரான்ஸாக்ஷன் லிமிட் வழங்கப்படுகிறது. மேலும், RBI விதிகளின் அடிப்படையில், குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு, உதாரணமாக, மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றிற்கு 2 லட்சம் ரூபாய் வரை லிமிட் கொடுக்கப்படுகிறது.


