Last Updated:
மக்களிடம் வணிகர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அச்சம் நிலவும் நிலையில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை வணிகர்கள் மக்களிடம் வசூலிக்கிறார்களா என்பதை கண்டறிய நாள்தோறும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPI மூலம் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இந்த கட்டணத்தை மக்களிடம் வசூலிக்கக் கூடாது எனவும், வணிகர்கள் தான் செலுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், மக்களிடம் வணிகர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அச்சம் நிலவும் நிலையில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
UPI கட்டண சுமையை மக்கள் மீது வணிகர்கள் சுமத்துகிறார்களா என்பதை, முந்தைய பரிவர்த்தனைகளுடன் ஒப்பிட்டு நாள்தோறும் கண்காணிப்போம் என கூறப்பட்டுள்ளது. மேலும், UPI பரிவர்த்தனை கட்டணத் தொகைக்கு GST விதிக்கப்படும் என்பது வதந்தி என்றும், மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


