Last Updated:
வரக்கூடிய நாட்களில் பெரிய அளவிலான UPI பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு அரசு MDR கட்டணத்தை வசூல் செய்யத் திட்டமிட்டு வருவதாக ஆன்லைனில் பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டதை அடுத்து நிதி அமைச்சகம் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாகப் போலியானது என்று உறுதி செய்துள்ளது.
UPI பரிவர்த்தனைகளுக்கு இனி வரும் காலத்தில் MDR என்று சுருக்கமாக அழைக்கப்படும் மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் வசூலிக்கப்படும் என்பது சம்பந்தமான தகவல்கள் முற்றிலும் உண்மையற்ற ஊகங்கள் என்று ஜூன் 11ஆம் தேதியன்று நிதி அமைச்சகம் உறுதி செய்தது. “இது மாதிரியான அடிப்படையற்ற ஊகங்கள் மக்களிடையே பயத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. எனினும், UPI மூலமாக டிஜிட்டல் பேமெண்ட்களை ஊக்குவிப்பதில் அரசு முழு ஈடுபாடோடு நடந்து வருகிறது” என்று நிதி அமைச்சகம் கூறியது.
வரக்கூடிய நாட்களில் பெரிய அளவிலான UPI பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு அரசு MDR கட்டணத்தை வசூல் செய்யத் திட்டமிட்டு வருவதாக ஆன்லைனில் பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டதை அடுத்து நிதி அமைச்சகம் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாகப் போலியானது என்று உறுதி செய்துள்ளது. பொதுவாக MDR என்பது பேமெண்ட்களைப் ப்ராசஸ் செய்வதற்காக வியாபாரிகளிடமிருந்து வங்கிகள் வசூல் செய்யும் ஒரு கட்டணம். முன்னதாக வியாபாரிகள் கார்டு பேமெண்ட்களின் மொத்த பணப்பரிமாற்ற மதிப்பில் ஒரு சதவீதத்தை MDR கட்டணமாகச் செலுத்தி வந்தனர். ஆனால், 2020ஆம் ஆண்டு இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்களை ஊக்குவிப்பதற்காக அரசு இந்த MDR கட்டணங்களைத் தள்ளுபடி செய்தது.
அதே சமயத்தில், மே மாதத்தில் 18.68 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் ப்ராசஸ் செய்யப்பட்டன. பணத்தின் அடிப்படையில் கூற வேண்டுமானால், மே மாதத்தில் மட்டும் 25.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உள்ள UPI பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. இது முந்தைய ஏப்ரல் மாதத்தில் 23.95 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த வருட மே மாதத்தில் நடைபெற்ற 14.03 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் 33 சதவீதம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. மே மாதத்தில் சராசரி தினசரி பரிவர்த்தனை மதிப்பு என்பது 81,106 கோடி ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 79.7 சதவீத பரிவர்த்தனை மதிப்புடன் ஒப்பிடும்போது 2024 – 25 நிதியாண்டில் 83.7 சதவீத மொத்த பரிவர்த்தனை மதிப்புடன் யுனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் தொடர்ந்து அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
RBI வெளியிட்ட ஆண்டு அறிக்கையின் படி, 2024- 25ல் UPI மூலமாக 185.8 பில்லியன் நடைபெற்று இருக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகமாக உள்ளது. இதனைப் பணத்தின் அடிப்படையில் கூறுவதால், 200 கோடி ரூபாயாக இருந்த UPI பரிவர்த்தனை 2024 நிதியாண்டில் 261 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த டிஜிட்டல் பேமெண்ட்கள் அதாவது பேமெண்ட் சிஸ்டம், கார்டு நெட்வொர்க்குகள் மற்றும் ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகள் போன்ற அனைத்தின் மூலமாகச் செய்யப்படும் பரிவர்த்தனைகள் 2025 நிதி ஆண்டில் 35 சதவீதம் உயர்ந்து 221.9 பில்லியனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்த டிஜிட்டல் பேமெண்ட்கள் 17.97% உயர்ந்து, 2862 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
June 12, 2025 5:32 PM IST


