• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Union Budget 2024-25 : புதிய வருமான வரித் திட்டத்தில் நிரந்தரக் கழிவு ரூ.75 ஆயிரமாக உயர்வு

GenevaTimes by GenevaTimes
July 27, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Union Budget 2024-25 : புதிய வருமான வரித் திட்டத்தில் நிரந்தரக் கழிவு ரூ.75 ஆயிரமாக உயர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வருமான வரி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். வருமான வரி செலுத்துவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் புதிய வரி முறையை தேர்வு செய்திருப்பதாக கூறிய அவர், வருமான வரி முறையை மேலும் எளிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

அதன்படி, புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அதாவது, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் அல்லது சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி இல்லை. ரூ.3,00,001 முதல் ரூ.7,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.7,00,001 முதல் ரூ.10,00,000 வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ,10,00,001 முதல் ரூ.12,00,000 வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரியும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.12,00,001 முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருமானத்திற்கு 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

விளம்பரம்

News18

முன்பு புதிய வரி முறையில், ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. அதே நேரத்தில் ரூ.3,00,001 முதல் ரூ.6,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரியும், 6,00,001 முதல் ரூ.9,00,000 வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ,9,00,001 முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. ரூ.12,00,001 முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவீத வரியும் விதிக்கப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிங்க:
ஒரு கோடி இளைஞர்களுக்கு… பட்ஜெட்டில் யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

தற்போது புதிய வரி முறையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தால் ரூ.12 லட்சத்திற்குள் வருமானம் ஈட்டுவோர் ரூ.12,500 வரை வருமான வரியில் சேமிக்க முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய வருமான வரி முறையில் முன்பு ரூ.50,000 மட்டுமே நிரந்தர கழிவாக இருந்தது. அதை தற்போது ரூ,75 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நிரந்தரக் கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும், முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

மனிதவள அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள்!! வெளிநாட்டு ஊழியர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை!!

Next Post

Budget – Gold price | சுங்க வரி குறைப்பு.. தங்கம் விலை எவ்வளவு வரை குறையும் தெரியுமா? நகை வியாபாரிகள் சங்க தலைவர் விளக்கம்! – News18 தமிழ்

Next Post
Budget – Gold price | சுங்க வரி குறைப்பு.. தங்கம் விலை எவ்வளவு வரை குறையும் தெரியுமா? நகை வியாபாரிகள் சங்க தலைவர் விளக்கம்! – News18 தமிழ்

Budget - Gold price | சுங்க வரி குறைப்பு.. தங்கம் விலை எவ்வளவு வரை குறையும் தெரியுமா? நகை வியாபாரிகள் சங்க தலைவர் விளக்கம்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin