மக்களவை தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்திருப்பதால் நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இதையொட்டி, நிதிநிலை அறிக்கையின் முன்னோட்டமாக கடந்த 2023-24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்திருந்தார். மேலும் வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும் எனவும் பட்ஜெட் குறித்து கூறியிருந்தார்.
மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து, வேலைவாய்ப்பின்மை, மாநிலங்களுக்கான கோரிக்கை என பல்வேறு தரப்பிலிருந்தும் பட்ஜெட் குறித்து கோரிக்கை வருவதால், இந்த பட்ஜெட் எதில் கவனம் செலுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க:
Live – இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?
மேலும் வருமான வரிக் கட்டமைப்பில் மாற்றம் செய்வது தொடர்பான அறிவிப்பு, மற்றும் தொழில் துறையினரை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டை தாக்கல் செவதன் மூலம், தொடர்ந்து 7ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
