Last Updated:
ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பட்ஜெட் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.
மக்களவையில் 2026-27 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதன்படி, அரிய வகை கனிம உற்பத்திக்காக 7 ஆயிரத்து 280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிய வகை கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இதற்காக தாது வளம் மிக்க ஒடிசா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரிய வகை கனிம வழித்தடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். விபத்து காப்பீட்டு தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்,
இந்தியாவிற்கென பாரத் விஸ்டா ஏ.ஐ உருவாக்கப்படும். மகளிருக்கான சுய உதவி தொழில் முனைவோர் சந்தைகள் அமைக்கப்படும்,
தொல்லியல் சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும். ஆதிச்சநல்லூரை பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிடும் வகையில் புதிய திட்டம் என்பது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் பட்ஜெட் என்று பாராட்டியுள்ளார்.
மேலும் இந்த பட்ஜெட் மகளிரை ஏராளமான துறைகளில் சக்தி படுத்தும் என்றும் எதிர்கால வளமான இந்தியாவுக்கு அடித்தளத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஏராளமான வாய்ப்புகளை பல்வேறு துறைகளில் ஏற்படுத்தும் என்று பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு மிக்கது என்று குறிப்பிட்டிருக்கிறார்.


