Last Updated:
Union Budget 2026 | மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு புதிய அறிவிப்புக்கள் மற்றும் திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு புதிய அறிவிப்புக்கள் மற்றும் திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2017-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை என்றபோதும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாங்கள் தொலைநோக்குடைய கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். தற்சார்பு நிலையை ஒரு தூணாகக் கொண்டு, பொது முதலீட்டில் வலுவான கவனம் செலுத்தும் அதே வேளையில், நிதி ஒழுங்கு மற்றும் பணவியல் நிலைத்தன்மையைப் பேணி வருகிறோம்.
நாங்கள் உள்நாட்டு உற்பத்தித் திறனையும், எரிசக்திப் பாதுகாப்பையும் மேம்படுத்தியுள்ளோம். எளிய முறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறி வருகிறது” என்றார். தொடர்ந்து பேசியவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் என்னென்ன?
- செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.O திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு.
- உயிரி மருத்துவத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
- மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா.
- விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம்.
- அரியவகை கனிமம் எடுப்பதற்கான புதிய திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவுக்கு அறிமுகம்.
- கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய தொழில் வழித்தடங்கள்.
- காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த ‘மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்’ என்ற புதிய திட்டம்.
- 3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
- பாரம்பரிய மருந்துகள் ஆராய்ச்சி மையம் குஜராத்தின் ஜாம்நகரில் அமைக்கப்படும்.
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.
- மாவட்டத்திற்கு ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும்.
- சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
- சென்னை – பெங்களூரு; சென்னை – ஐதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடம்.
- பொது போக்குவரத்துக்கு நாடு முழுவதும் 20 நீர்வழித் தடங்கள் அமைக்கப்படும்.
- கண்டெய்னர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
- ரூ.5,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் பொருளாதார மண்டலங்கள்.
Delhi,Delhi,Delhi
Feb 01, 2026 11:56 AM IST
Union Budget | மகளிர் விடுதி முதல் சென்னைக்கு அதிவேக ரயில் தடம் வரை… பட்ஜெட் அறிவிப்புக்கள் என்னென்ன?


