Last Updated:
2017-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை என்றபோதும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு குறித்து குறிப்பிட்டவர் ஒரு திட்டத்தையும் அறிவித்தார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2017-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை என்றபோதும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாங்கள் தொலைநோக்குடைய கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். தற்சார்பு நிலையை ஒரு தூணாகக் கொண்டு, பொது முதலீட்டில் வலுவான கவனம் செலுத்தும் அதே வேளையில், நிதி ஒழுங்கு மற்றும் பணவியல் நிலைத்தன்மையைப் பேணி வருகிறோம். நாங்கள் உள்நாட்டு உற்பத்தித் திறனையும், எரிசக்திப் பாதுகாப்பையும் மேம்படுத்தியுள்ளோம். எளிய முறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறி வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.O திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும், செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உயிரி மருத்துவத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும். விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “அரிய வகை மண் காந்தங்களை (Rare earth magnets) தயாரிப்பதற்கான திட்டம் 2025-இல் தொடங்கப்பட்டது. தற்போது அதன் அடுத்த கட்டமாக, கனிம வளங்கள் அதிகம் உள்ள ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், இதற்கெனத் தனிச் சிறப்புப் பொருளாதாரப் பாதைகளை (Rare-earth corridors) உருவாக்க அரசு ஆதரவளிக்க போகிறது” என்றார். தொடர்ந்து சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் தடம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Feb 01, 2026 11:37 AM IST


