Last Updated:
Budget 2026 | 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பாதுகாப்பு, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளை தவிர்த்து மற்ற துறைகளுக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும், 82 ஆயிரத்து 703 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த முறை 2 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அது தற்போது 2 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கு கடந்த ஆண்டை விட 24 ஆயிரத்து 905 கோடி ரூபாய் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு 10 ஆயிரத்து 639 கோடியும், சுகாதாரத் துறைக்கு 4 ஆயிரத்து 741 கோடியும், வெளியுறவுத் துறைக்கு ஆயிரத்து 603 கோடியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு கடந்த ஆண்டை விட 51 ஆயிரத்து 850 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிக்கு 11 ஆயிரத்து 255 கோடி ரூபாய் குறைவாகவும், பாதுகாப்புத்துறைக்கு 86 ஆயிரத்து 625 கோடி ரூபாய் குறைவாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


