ஐ.நா.சபையில் நிரந்தர உறுப்பினராவதற்கான கோரிக்கையை இந்தியா பல காலமாக வலியுறுத்தி வருகிறது. அதற்கு பல நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தாலும் அதற்கான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் டெஸ்லா தலைவரான எலான் மஸ்க் இந்தியா ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு அளித்திருந்தார். தற்போது அமெரிக்காவும் அதற்கு ஆதரவு அளித்துள்ளது.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், 10 நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாகவும் உள்ளன. சீனா, பிரான்ஸ்,ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தற்காலிக உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இந்தியாவின் நிலைப்பாடு:
இந்த பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக மாறுவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
இந்தியா தூதர் ருசிரா கம்போஜ்:
இதில் பேசிய ஐ.நா.விற்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ், “வளர்ந்து வரும் நாடுகள், ஆப்பிரிக்கா-லத்தீன் அமெரிக்கா போன்ற பிரதிநித்துவம் இல்லாத பகுதிகள், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இடம் அளிக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக மற்றும் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை விரிவிபடுத்த வேண்டும். இதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.” எனக் கூறினார்.
எலான் மஸ்க்:
முன்னதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரவாதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவிற்கு உள்ளது. இந்தியாவிற்கு பாதுகாப்பு கவுன்சிலில் இடம் அளிக்காதது அபத்தமானது.’எனக் கூறியிருந்தார்.
நிச்சயமாக இடம் உண்டு:
இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல், “ஐ.நா. அவையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான ஆதரவை அமெரிக்கா அளித்துள்ளது. இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான அனைத்து முயற்சிகளையும் அமெரிக்க முன்னெடுக்கும்.” எனக் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
