Last Updated:
முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது.
டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
2026 ஆம் ஆண்டு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெறுகின்றன. இதில் விளையாடுவதற்கு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தகுதி பெற்றுள்ள நிலையில், சிறிய அணிகளுக்கான தகுதிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் 9 அணிகள் பங்கேற்றன. அதிலிருந்து சூப்பர் 6 பிரிவுக்கு ஓமன் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சமோவா, கத்தார் அணிகள் முன்னேறின. இந்நிலையில் நேற்று ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான போட்டி ஓமனில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஓமன் அணி கடைசி 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.
October 14, 2025 3:42 PM IST