Last Updated:
தமிழக இளைஞர்கள் உலக அரங்கில் சாதிப்பது மாநிலத்திற்கே பெருமை என்று உதயநிதி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
U19 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர்களை நேரில் அழைத்து துணை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
ஜிம்பாப்வேவில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி 6-வது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த வரலாற்று சாதனை படைப்பதில் தமிழக வீரர்கள் 2 பேர் முக்கிய பங்காற்றினர். மிக முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் சரிவுக்கு ஆர்.எஸ். அம்பிரிஷ் காரணமாக இருந்தார்.
ICC Under-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2026-இல் கோப்பையை வென்ற நம் இந்திய அணியில், இடம்பெற்று இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான தம்பிகள் அம்ப்ரிஷ் மற்றும் தீபேஷ் ஆகியோரை இன்று நாம் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாட்டைச்… pic.twitter.com/qpKIIzE8Qm— Udhay – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) February 12, 2026
தனது துல்லியமான பந்துவீச்சால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தீபேஷ் தேவேந்திரன் வெற்றியை உறுதி செய்தார். இந்த நிலையில் சென்னை திரும்பிய அம்பிரிஷ் மற்றும் தீபேஷ் தேவேந்திரனுக்கு தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கௌரவித்தது.
மேலும், 2 இளம் வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

