• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

TVS குடும்பத்தில் சொத்து பிரச்சினை: மகளுக்கு நிர்வாகத்தை தருவதில் பாகுபாடு? நீதிமன்றம் செல்கிறாரா? | TVS Family Succession Dispute: Lakshmi Venu Alleges Unequal Asset Division as Rift With Venu Srinivasan Deepens

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
TVS குடும்பத்தில் சொத்து பிரச்சினை: மகளுக்கு நிர்வாகத்தை தருவதில் பாகுபாடு? நீதிமன்றம் செல்கிறாரா? | TVS Family Succession Dispute: Lakshmi Venu Alleges Unequal Asset Division as Rift With Venu Srinivasan Deepens
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


TVS குடும்பத்தில் சொத்து பிரச்சினை: மகளுக்கு நிர்வாகத்தை தருவதில் பாகுபாடு? நீதிமன்றம் செல்கிறாரா?

இந்தியாவில் மிக பிரபலமான தொழில் குழுமங்களில் ஒன்று டிவிஎஸ் குழுமம் (TVS Group). சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் குழுமத்தின் முக்கிய தலைவரான வேணு சீனிவாசன் குடும்பத்திற்குள் சொத்துரிமை மற்றும் வாரிசுரிமை மோதல் வெடித்துள்ளது. தொழில் துறையில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாகவும் இது மாறி இருக்கிறது.

டிவிஎஸ் குழுமம் இருசக்கர வாகனம், வாகன உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஃபேஷன், பைனான்ஸ், இன்சூரன்ஸ் என பல துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. 50 துணை நிறுவனங்களையும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் குழுமத்தில் சொத்துரிமை பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது என மிண்ட் தளம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.

TVS குடும்பத்தில் சொத்து பிரச்சினை: மகளுக்கு நிர்வாகத்தை தருவதில் பாகுபாடு? நீதிமன்றம் செல்கிறாரா?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மகன் மற்றும் மகளுக்கு இடையில் தான் சொத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் வேணு சீனிவாசன் மற்றும் அவரது மகன் சுதர்சன் வேணு ஒரு அணியாகவும், வேணு சீனிவாசனின் மனைவியும் TAFE நிறுவனத்தின் தலைவருமான மல்லிகா சீனிவாசன் மற்றும் அவர்களின் மகள் லட்சுமி வேணு ஒரு அணியாகவும் பிரிந்து நிற்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 18 மாதங்களாக சொத்து தொடர்பாகவும் வாரிசுரிமை தொடர்பாகவும் இவர்களுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை தீர்க்க சமரச முயற்சிகள் எடுத்தும் அவை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த விவகாரம் தற்போது பெரிய பிரச்சினையாக வெடிக்க தொடங்கியுள்ளது.

இந்த சர்ச்சையின் மையப்புள்ளியாக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. இதன்படி, சுதர்சன் வேணுவிடம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும், லட்சுமி வேணுவிடம் Die-casting நிறுவனமான சுந்தரம்-கிளேட்டன் (Sundaram-Clayton) நிறுவனமும் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மல்லிகா சீனிவாசன் மற்றும் லட்சுமி வேணு தரப்பில் இந்த ஒப்பந்தம் என்பது பிராண்ட் பயன்பாட்டு உரிமைகள் (Brand usage rights) மற்றும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட கூடாது என்பதற்கான விதிமுறைகளுக்கானது மட்டுமே என்றும், இது எந்தவொரு இறுதி நிதி அல்லது சொத்து பிரிவினையை குறிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். அதாவது 2024இல் போடப்பட்டது ஒரு ஒப்பந்தம் தானே தவிர சொத்து பிரிப்பு கிடையாது. குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்துக்களில் இரு பிள்ளைகளுக்கும் சமமான உரிமைகள் உண்டு என தெரிவிக்கின்றனர்.

இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, இருதரப்புக்கும் பிரிக்கப்பட்டதாக கூறப்படும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு தான். சுதர்சன் வேணுவின் கட்டுப்பாட்டில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மிக 1.83 லட்சம் கோடி ரூபாய். இதுவே லட்சுமி வேணு நிர்வாகம் செய்யும் சுந்தரம்-கிளேட்டன் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 2,432 கோடி ரூபாய் தான்.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது, ஆனால் லட்சுமி வேணுவுக்கு ஒதுக்கப்பட்ட நிறுவனம் அவ்வளவு உயரவில்லை. இந்த ஏற்றத்தாழ்வு தாழ்வு பிரச்சினையின் மையப்புள்ளியே. அது மட்டுமில்லாமல் டிவிஎஸ் குடும்பத்தின் பெரும்பகுதி பங்குகள் VS ட்ரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இதில் வேணு சீனிவாசன் அறங்காவலராக உள்ளார். சுதர்சன் வேணு இதன் மூலம் பெரும் பயனாளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆனால், லட்சுமி வேணுவின் பெயர் இதில் விடுபட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கேட்ட போதும் தந்தை மற்றும் சகோதரர் தரப்பில் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான லட்சுமி வேணு, கார்ப்பரேட் நிர்வாக குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிறுவன செயலாளரை அண்மையில் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். ஆனால், அடுத்த 72 மணி நேரத்திற்குள் தந்தை வேணு சீனிவாசன் அவசர கூட்டத்தைக் கூட்டி, அந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவரை பணியில் அமர்த்தியதோடு நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்தியுள்ளார்.

இதனால் இன்னும் கோபமடைந்த லட்சுமி வேணு சொத்து மற்றும் வாரிசுரிமை பிரச்சினையை கிளப்பியுள்ளார். இதில் தாயார் மல்லிகா அவருக்கு ஆதரவாக இருக்கிறார். நம் நாட்டு சட்டப்படி தந்தையின் சொத்தில் மகன், மகள் என இருவருக்குமே சமமான உரிமை இருக்கிறது, ஆனால் அது மறுக்கப்படுகிறதே என்பது தான் லட்சுமி வேணு தரப்பின் கோபத்திற்கு காரணமாம்.

இந்த சொத்துரிமை பிரச்சினையில் பலர் மத்தியஸ்தம் செய்ய முயன்றும் தீர்வு கிடைக்காத நிலையில் லட்சுமி வேணு தரப்பில் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சொத்துரிமை பிரச்சினையால் டிவிஎஸ் நிறுவனங்களின் தினசரி வணிக செயல்பாடுகளில் எந்த பிரச்சினையும் இல்லை, அவை வழக்கம் போல் இயங்குகின்றன.

Share This Article

English summary

TVS Family Succession Dispute: Lakshmi Venu Alleges Unequal Asset Division as Rift With Venu Srinivasan Deepens

TVS குடும்பத்தில் சொத்து பிரச்சினை: மகளுக்கு சொத்து தருவதில் பாகுபாடு? சிக்கலில் வேணு சீனிவாசன்? / A major succession dispute has reportedly emerged within the family of TVS Motor chairman emeritus Venu Srinivasan and TAFE chairperson Mallika Srinivasan.

Story first published: Saturday, October 10, 2026, 14:29 [IST]

Read More

Previous Post

ரூ.1.80 லட்சம் கோடி டிவிஎஸ் சாம்ராஜ்யம்! மகன் சுதர்சன் vs மகள் லட்சுமி இடையே வாரிசுரிமை மோதல் | What is TVS Family Succession Dispute: Venu Srinivasan’s Children and the ₹1.8 Lakh Crore Empire

Next Post

185 கிலோமீட்டர் வேகம்.. இசையாஸ் புயல் தாக்கத்தால் சூறாவளி காற்றுடன் பேய் மழை.!

Next Post
185 கிலோமீட்டர் வேகம்.. இசையாஸ் புயல் தாக்கத்தால் சூறாவளி காற்றுடன் பேய் மழை.!

185 கிலோமீட்டர் வேகம்.. இசையாஸ் புயல் தாக்கத்தால் சூறாவளி காற்றுடன் பேய் மழை.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin