சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா (Alibaba), டென்சென்ட் (Tencent), TikTok-ன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance), ஜேடி.காம் (JD.com) ஆகியவற்றிற்கு AI சிப்களை விற்க Nvidia நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தலா 75,000 அலகுகள் (Units) வரை Nvidia H200 AI சிப்களை நேரடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பு மூலமாகவோ கொள்முதல் செய்துகொள்ள அமெரிக்கா பச்சைக் கொடி காட்டியுள்ளது. ஆனால், இந்த சிப்கள் ராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற கடுமையான விதிமுறை நீடிக்கிறது.


