Last Updated:
தங்கள் வருவாயில் பெரும் பகுதிக்கு அமெரிக்க ஒப்பந்தங்களை நம்பியிருக்கும் ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு உள்ளிட்ட கொள்கைகளால் பங்குச்சந்தைகளில் ஐடி நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதன்படி Infosys, TCS, Persistent Systems, Coforge and Mphasis போன்ற ஐடி நிறுவனங்களின் பங்குகள் இன்று 3% வரை சரிந்துள்ளன. வர்த்தகப் போரால் இந்தியாவில் உள்ள ஐடி துறைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்கா வரிகளை மாற்றி அமைக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும் பரஸ்பர வரி விதிப்பு முறைக்கு மாறுவதே அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து, ஐடி நிறுவனங்களின் நிஃப்டி கிட்டத்தட்ட மூன்று சதவீதம் சரிந்தது.
Also Read: Trump Tariffs: டிரம்பின் பரஸ்பர வரி.. எந்தெந்த துறைகள் பாதிக்கும்? தடுக்க என்ன செய்யலாம்?
தங்கள் வருவாயில் பெரும் பகுதிக்கு அமெரிக்க ஒப்பந்தங்களை நம்பியிருக்கும் ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. காலை 9.30 மணிக்கு, தகவல் தொழில்நுட்ப அளவீட்டு நிஃப்டி ஐடி 2.5 சதவீதம் சரிந்து 35,360.20 ஆக இருந்தது. ஐடி குறியீட்டில், பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ், கோஃபோர்ஜ் மற்றும் எம்பாசிஸ் போன்ற மிட்-கேப் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்து 6 சதவீதமாக உயர்ந்தன.
இந்த ஐடி நிறுவனங்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதிக்கு அமெரிக்காவிற்கான சேவை ஏற்றுமதியை நம்பியுள்ளன. வரிகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐடி சேவைகளை பயன்படுத்தும் பல நிறுவனங்கள் செலவை கட்டுப்படுத்த ஐடி சேவைகளுக்கு செலவு செய்வதை குறைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. நிஃப்டி ஐடி அளவீடு கடந்த மாதத்தில் ஆறு சதவீதம் சரிந்துள்ளது. மேலும், கடந்த 6 மாதங்களில் 15 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
April 03, 2025 11:46 AM IST