இன்று அமெரிக்கா அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் சந்திக்க உள்ளனர்.
இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சமே, “ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம்’ தான்.
ட்ரம்ப் உடனான சந்திப்பு குறித்து நேற்று புதின், “என்னைப் பொறுத்தவரை, தற்போதைய அமெரிக்க அரசாங்கம் மிக ஆற்றலுடனும், நேர்மையாகவும் போர்களை நிறுத்தவும், நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டுவரவும், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரின் நலன்களுக்கு ஏற்ற ஒப்பந்தங்களை எட்டவும் முயற்சிகள் செய்து வருகிறது.
அமெரிக்கா நம் நாடுகளுக்கு இடையேவும், ஐரோப்பாவிலும், உலகத்திலும் நீண்ட கால அமைதிக்கான சூழலை உருவாக்க முயன்று வருகிறது.
அமெரிக்கா உடனான அடுத்தகட்ட சந்திப்புகளில், ஆயுதங்கள் சம்பந்தமான விஷயங்களில் ஒப்பந்தத்தை எட்டினால், அது பெரியளவிலான அமைதிக்கு வழி வகுக்கும்” என்று பேசியுள்ளார்.

