குழப்பத்தில் உலகம்…
ட்ரம்பின் கூற்றுப்படி, பாகிஸ்தானில் ஏகப்பட்ட எண்ணெய் வளங்கள் உள்ளன. அதனை மேம்படுத்தவே அமெரிக்கா உதவ உள்ளது.
ஆனால், உலக நாடுகளுக்குத் தற்போது இருக்கும் குழப்பம் என்னவெனில், ‘உண்மையிலேயே பாகிஸ்தானில் அவ்வளவு எண்ணெய் வளங்கள் உள்ளதா?’ என்பதுதான்.
இந்தக் குழப்பத்திற்குக் காரணங்கள் இரண்டு உள்ளன.
ஒன்று, உண்மையிலேயே, இதுவரை பாகிஸ்தானில் எண்ணெய் வளம் இருப்பதற்கான ஆய்வுகளே போய்க்கொண்டிருக்கிறதே தவிர, பெரியளவில் எண்ணெய் வளங்கள் இருப்பது தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இன்னொன்று, பாகிஸ்தானே இப்போது வரை தங்களுக்குத் தேவையான எரிசக்திகளை இறக்குமதிதான் செய்து வருகிறது. பாகிஸ்தான் எண்ணெய் தயாரிக்கிறதுதான். ஆனால், அதுவும் மிக மிகக் குறைந்த அளவு மட்டுமே. அப்புறம் எப்படி..?
அப்படியிருக்கையில், ட்ரம்பின் கூற்று எப்படி உண்மை ஆகும் என்பதே உலகத்தின் குழப்பம் ஆகும்.
