தண்டணை அளிக்கும் விதமாக ட்ரம்ப் போட்டுள்ள வரி விதிப்புகளால் உலக நாடுகள் அவருடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள துடிப்பதாகக் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளில் “They are dying to make a deal,”.
உலக தலைவர்களின் விரக்தியை கேலி செய்யும் விதமாக நக்கலாக, “தயவுசெய்து, ஐயா, ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள். நான் எதையும் செய்வேன். நான் எதையும் செய்வேன், ஐயா” என கெஞ்சுவதுபோல செய்துகாட்டியுள்ளார்.
ட்ரம்ப்பின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து, வெளிநாட்டு அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க காங்கிரஸ் கையாள வேண்டும் என முன்மொழிந்த சொந்த குடியரசு கட்சியினரையும் கேலி செய்துள்ளார். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் பேரம் பேசுவது போல் நீங்கள் பேரம் பேசுவதில்லை” எனக் கூறியுள்ளார்.

ஏப்ரல் 2ம் தேதி அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் சரமாரி கட்டணங்கள் கிட்டத்தட்ட அனைத்து நாடுகள் மீதும் குறைந்தபட்சம் 10% அடிப்படை வரியை புகுத்தியுள்ளன.

