இந்தத் தேர்வு குறித்து பேசியுள்ள டிரம்ப், “அந்த தேர்வில், முதல் கேள்வி மிகவும் எளிதானது. உங்களிடம் ஒரு சிங்கம், ஒரு கரடி, ஒரு முதலை மற்றும்… வேறென்ன நல்ல விலங்கு… ஒரு அணில் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். இவற்றின் படங்களை மொத்தமாக காண்பித்து, ‘இதில் எது அணில்?’ என்று கேட்பார்கள். இந்தக் கேள்வி தொடக்கத்தில் பார்ப்பதற்கு எளிதாக தெரிந்தாலும், போக போக கடினமாகிவிடும்” என்றுள்ளார். எதற்காக இந்த உதாரணத்தை டிரம்ப் சொன்னார் என்பதற்கு பதிலே இல்லை.


