• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடித் திட்டம் `குவண்டமோ சிறை'… அதன் திகில் வரலாறு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
January 31, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
Trump: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடித் திட்டம் `குவண்டமோ சிறை'… அதன் திகில் வரலாறு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதிபர் பதவியில் அமர்ந்ததிலிருந்து, சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருப்பவர்களை நாடு கடத்துவதில் தீவிரமாக இருக்கிறார். இதற்கிடையில், திருட்டு, வன்முறை போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை விசாரணைக்கு முன் சிறையில் வைக்கும் லேகன் ரிலே சட்ட மசோதாவில் கையெழுத்திட்டிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “வெனிசுலா நாட்டிலிருந்து இங்கு குடியேறியவரால் கொல்லப்பட்ட அமெரிக்க மாணவர் லேகன் ரிலே பெயரில் இந்த சட்டம் அழைக்கப்படும்.

ட்ரம்ப்

இந்த சட்டத்தின்படி, 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, பயங்கரவாத சந்தேக நபர்களை அடைத்து வைக்கப்பயன்படுத்தப்படும் குவாண்டனாமோ விரிகுடா இராணுவ சிறையில், 30,000 ‘சட்டவிரோத வெளிநாட்டினரை’ அடைத்து வைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்காக 30,000 பேர் தங்கும் அளவிலான வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென, பென்டகன் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்.

அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் மோசமான குற்றவாளிகளை அவர்களின் சொந்த நாடுகள் அந்தந்த நாட்டினரே வைத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் அவர்களை சிறையில் அடைக்க வழிவகை செய்யப்படுகிறது. நமது நாட்டில் புலம்பெயர்ந்தோர் குற்றங்களின் கொடுமையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு இதுமுதல் படி” என்றார்.

Trump: “அமெரிக்காவில் உற்பத்தி செய்தால், உலகிலேயே குறைவான வரி..” -டிரம்ப் சொல்வதென்ன?
குவாண்டனாமோவின் வரலாறு:

1903-ம் ஆண்டுக்கு முந்தைய ஒப்பந்தத்தின் கீழ் ஹவானாவிலிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட தென்கிழக்கு கியூபாவில் குவாண்டனாமோ விரிகுடாவில் இராணுவ தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது. ஜனவரி 2002-ல் கடலோர பகுதியில் அமெரிக்க கடற்படை தளத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த தடுப்பு முகாம், சுற்றிலும் கடல், மின் வேலி, உயரமான சுவர், ஆயிரகணக்கான ராணுவ வீரர்களால் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, ‘அமெரிக்காவுக்கு எதிராகப் போராடும் போராளிகள்” என்று அழைக்கப்பட்டவர்கள், அமெரிக்க சட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட கைதிகள் போன்றோரைக் கையாள்வதற்காக, அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ் நிர்வாகத்தால் இந்த தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் தற்போது அது சிறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் பராக் ஒபாமாவும், ஜோ பைடனும் இந்த முகாமை மூடுவதற்கு முயன்றனர். ஆனால் குவாண்டனாமோ சிறைச்சாலையை மூடுவதற்கான முயற்சிகளை காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் எதிர்த்ததால், அந்த முயற்சிகள் தோல்வியை தழுவின.

Trump: `அதிபரான டிரம்பினால் பகுதி நேர வேலையை விட்டு அல்லல்படும் மாணவர்கள்’ – காரணம் என்ன?!
குவாண்டனாமோவில் புலம்பெயர்ந்தோர்?

குவாண்டனாமோ சிறையில், 2020 – 2023 வரை, 37 சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். 2002-ல் குவாண்டனாமோ சிறையில் புலம்பெயர்ந்த குற்றவாளிகள் தவிர, 800 கைதிகள் இருந்தனர். ஆனால், தற்போது மூன்று பேர் இடமாற்றத்திற்கு தகுதியுடையவர்கள், மூன்று பேர் மறு விசாரணை ஆய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் என அவர்களில்15 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இதே சிறையில், 9/11 சதித்திட்டக் குற்றவாளிகள் எனக் கருதப்படும் காலித் ஷேக் முகமது, USS கோல் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட அப்துல் ரகீம், அல் நஷிரி ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களில் 55 சதவிகித பேர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாதவர்கள் என ஆய்வு முடிவுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

குவாண்டமோ சிறை
Gaza மக்களை வெளியேற்ற Trump போடும் திட்டம் என்ன? Decode
மனித உரிமைகளை மீறல்?

உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவளிப்பது உள்ளிட்டக் குற்றங்கள் தொடர்வதாகவும், சிறை சித்திரவதையால் இதுவரை 7 கைதிகள் தற்கொலை செய்தும், 9 கைதிகள் கொடுமையால பாதிக்கப்பட்டு இறந்திருக்கின்றனர் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், குவாண்டனாமோ சிறை மனித உரிமை மீறல்களுக்காக உலகளவில் கண்டனத்தையும் எதிர்கொள்கிறது. தற்போது டொனால்ட் ட்ரம்பின் இந்தப் புதிய சட்டத்தை விமர்சிப்பவர்கள், “இந்தச் சட்டம் அமெரிக்காவின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் சட்ட ஒழுங்கின்மை” எனக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

முரட்டு முடிவுகள்… ஆபத்தான அதிரடிகள்… கலகத்தலைவன் ட்ரம்ப்!

Read More

Previous Post

‘2025 பட்ஜெட் புதிய உத்வேகம் தரும்’ – பிரதமர் மோடி உறுதி | Innovation, Inclusion and Investment have been the foundation of our economic roadmap: PM Modi

Next Post

டெல்லியில், கடந்த 56 நாட்களில் குளிருக்கு 474 பேர் பலி | Makkal Osai

Next Post
டெல்லியில், கடந்த 56 நாட்களில் குளிருக்கு 474 பேர் பலி | Makkal Osai

டெல்லியில், கடந்த 56 நாட்களில் குளிருக்கு 474 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin