நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவிப்பதன்படி, ரியான் ரூத், நார்த் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் கட்டடத் தொழிலாளி. தற்போது ஒரு நிறுவனம் வைத்திருக்கிறார்.
இவருக்கு இராணுவப் பின்னணி எதுவும் இல்லை என்றாலும், ரஷ்யாவுக்கு எதிராகச் சண்டையிட விருப்பப்படுவதாக அறிவித்துள்ளார். ஆன்லைனில் அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்துக் கருத்துச் சொல்பவராக அறியப்படுகிறார்.
2022ம் ஆண்டு அவரது எக்ஸ் கணக்கில் உக்ரைன் – ரஷ்யா போரில் சண்டையிட விருப்பப்படுவதாகப் பதிவிட்டுள்ளார்.

பொதுமக்கள் போர்களில் ஈடுபடுவது குறித்து அவர் பேசிவந்துள்ளார். அவரது வாட்ஸ்அப் பயோவில் “நாம் ஒவ்வொருவரும் தினமும் மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கு நமது பங்கைச் செய்ய வேண்டும்; நாம் ஒவ்வொருவரும் சீனர்களுக்கு உதவ வேண்டும்” என எழுதியிருக்கிறார்.

&w=1200&resize=1200,675&ssl=1)