அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள் மற்றும் லண்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபராகப் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

வெளிநாட்டினருக்கு எதிரான குடியேற்ற நடவடிக்கை, சட்டப்பூர்வமாக நுழைந்தோருக்கு எதிராகவும் நடவடிக்கை, பல்கலைக்கழக நிதியை முடக்குவது, இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பு, அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்யும் வகையில் அதிகாரத்தை வலுப்படுத்துவது, திருநங்கையரின் பாலினத்தை அங்கீகரிக்க மறுத்து உத்தரவிட்டது, ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை, ஏழை அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு உதவி திட்ட நிதியை பெருமளவு குறைத்தது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.