திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய கேரட், பீட்ரூட், டர்னிப், காலிப்பிளவர், உருளைகிழங்கு, பட்டாணி, நூல்கோல், உள்ளிட்ட பல்வேறு மலைக்காய்கறிகளையும் தரைப்பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், அவரை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளையும் கொள்முதல் செய்து தினசரி காய்கறி சந்தையில் வியாபாரிகள் விற்பனை செய்வது வழக்கம்.


