ரீடெயில் விலைகள் மட்டுமல்லாமல் ஹோல்சேல் விலைகளும் உயர்ந்துள்ளன – தக்காளியைப் பொறுத்தவரை முக்கிய சப்ளையராக இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 45% மற்றும் வட இந்தியாவின் மிகப்பெரிய விநியோக மையமான டெல்லியில் 26% விலை அதிகரித்துள்ளது. நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த அக்டோபர் 19 முதல் நவம்பர் 19 வரையிலான காலகட்டத்தில் அகில இந்திய சராசரி ரீடெயில் விலை 27% உயர்ந்து, தக்காளி விலை கிலோவுக்கு ரூ.36-லிருந்து ரூ.46-ஆக உயர்ந்துள்ளது. சண்டிகரில் அதிகபட்சமாக 112% விலை உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் தக்காளியின் மாதாந்திர விலை 40%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.


