மதுரையில் இன்று (ஏப்ரல் 16) தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தை நிலவர அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபகாலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மதுரையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6 ஆயிரத்து 790க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மதுரையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பா..? வானிலை ஆய்வு மைய அறிவிப்பு என்ன..?
அதன்படி, மதுரையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6ஆயிரத்து 870 ஆகவும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54ஆயிரத்து 960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 628 ஆகவும், சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45 ஆயிரத்து 024 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.90 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
