தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.

&w=1200&resize=1200,675&ssl=1)