ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், “தமிழ் மாநில காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும். பாஜக – தமாகா இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. தேர்தல், களப்பணி, வெற்றி வியூகம் தொடர்பாக இந்த சந்திப்பில் பொதுவாக பேசினோம்.