அதேபோல், கடந்த சில போட்டிகளாக 20, 0, 14, 1 மற்றும் 8 என குறைவான ரன்கள் எடுத்து தடுமாறி வந்த திலக் வர்மா சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பினார். திலக் வர்மாவுக்கு இது ஐபிஎல் சதம். அதே நேரம், மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த அதிவேக சதம் என்ற சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் ஜெயசூர்யா இதே 45 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அதனை 18 ஆண்டுகளுக்கு பின் திலக் வர்மா சமன் செய்தார்.


