20/3 என்ற கட்டத்தில் இணைந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் கூட்டணி, தேவைப்படும் இடத்தில் நிதானமாகவும், வாய்ப்பு கிடைக்கும் போது அதிரடியாகவும் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சஞ்சு சாம்சன் 24 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 41 பந்துகளில் திலக் வர்மா அரை சதம் அடித்தார். பின்னர், திலக் வர்மாவுடன் கைகோர்த்த ஷிபம் துபே, 2 சிக்ஸர் 2 பவுண்டரி என 33 ரன்களை குவித்து, 18 ஆவது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார்.


