Last Updated:
நெருக்கடி காலத்தில் முடிவெடுக்கும் திறன், உணர்ச்சி திறன்கள் என உளவியல் சார்ந்த பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
‘டியாங்கோங்’ என்று அழைக்கப்படும் சீன விண்வெளி நிலையத்தில் அந்நாட்டு வீரர்கள் விண்வெளி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட காட்சிகள்தான் இவை…

அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையத்தைத் தவிர, சீனாவும் தனி விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. ‘டியாங்கோங்’ என்று அழைக்கப்படும் இந்த விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்வதற்காக ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீரர்கள் சென்று வரும் நிலையில், விண்வெளியில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மூன்று பேர் கொண்ட குழுவினர் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்தக் குழுவினர் மூட்டு இயக்கவியல், தசை அமைப்பு உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இஇஜி எனப்படும் எலக்ட்ரோ என்செபலோகிராம் கருவி மூலம் மூளையின் செயல்பாடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நெருக்கடி காலத்தில் முடிவெடுக்கும் திறன், உணர்ச்சி திறன்கள் என உளவியல் சார்ந்த பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர்.


