அனைத்து வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், “மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. நடந்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை வருந்தவில்லை. அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, எதிர் தரப்பினரின் ஆட்சேபங்களுக்கு பதிலளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

