புதுடில்லி:புதுடில்லி சாகர்பூர் டப்ரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சாலையோரத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு சிறுமி மயங்கிக் கிடந்தார்.
பொதுமக்கள் சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து, பெற்றோர் மற்றும் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
போலீசிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், ‘சமூக ஊடகத்தில் அறிமுகமான நண்பரை சந்திக்கச் சென்றேன். அவர் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்; அப்போது நான் மயங்கி விட்டேன்’ என கூறியுள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
https://www.youtube.com/watch?v=UUqEDJzkhW0
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement