Last Updated:
துபாயில் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் இரண்டாவது முறையாக கீழே விழுந்து வெடித்து சிதறியது.
விமான சாகச நிகழ்ச்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் சர்வதேச விமானப்படை விமான கண்காட்சி கடந்த 17ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து தேஜஸ் போர் விமானம் பங்கேற்றிருந்தது.
அதன்படி இன்று துபாயில் விமான சாகச கண்காட்சியில் ஈடுபட்டிருந்தபோது, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் வானத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
விமானம் கீழே விழுந்து நொறுங்கி வெடித்து சிதறிய காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், விமானம் விபத்து ஏற்பட்டபோது, விமானி அதனுள் இருந்தார் என்றும், அவர் வெளியேறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானியின் நிலை என்ன என்பது இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தேஜஸ் விமானம் கடந்த 2015ல் இருந்து முழு நேரமாக விமானப்படையில் இருந்துவருகிறது. இந்நிலையில், இந்த விமானம் இரண்டாவது முறையாக இன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
November 21, 2025 4:38 PM IST
Tejas Jet Crash | இரண்டாவது முறையாக விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம்… கீழே விழுந்து வெடித்து சிதறிய அதிர்ச்சி காட்சிகள்


